"தீபன் பக்கங்கள்"

திருமணமான 1 மணி நேரத்தில் விவாகரத்து!!


திருமணமான 1 மணி நேரத்தில் விவாகரத்து!!

புதிதாக திருமணம் செய்த மனைவி கார் கேட்ட காரணத்தினால், திருமணமான 1 மணி நேரத்திலேயே கணவர் விவாகரத்து செய்த சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது.

லீ(வயது 23)வுக்கு 27 வயதான வாங் என்பவருடன் திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.அப்போது அங்கு கார் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் வந்தார். லீ தனது கணவர் வாங்கிடம் புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு கேட்டார்.

அதற்கு வாங் மறுப்பு தெரிவிக்கவே, இவர்களின் சண்டை முற்றியது. கார் வாங்கித் தராவிட்டால், விவாகரத்து செய்து விடுவதாக லீ மிரட்டினாள்.

பின் அவர்கள் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான மனுவை பூர்த்தி செய்து தந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

Loading