"தீபன் பக்கங்கள்"

ஹாரிபோட்டர் ஸ்டூடியோவை சுற்றிப் பாருங்கள் - புகைப்படம்

பிரமாண்ட திரைப்படமான ஹாரிபோட்டர் படப்பிடிப்பு தளங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பொதுமக்கள்
பார்வைக்காக வரும் 31திகதி திறக்கவுள்ளது. Leavesden ஸ்டூடியோவில் 10 வருடமாக எடுத்து முடிக்கப்பட்ட ஹாரிபோட்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளங்கள், சாதனங்கள், ஆடை அணிகள் போன்ற பலவற்றை காட்சிபடுத்துகிறார்கள். லண்டனில் Watford அருகில் அமைந்துள்ள Hogwarts கோட்டையின் ஸ்டூடியோ அதன் உள்ளே அமைந்திருக்கும் பெரிய விராந்தை, Dumbledore இன் அலுவலகம், வகுப்பறைகள் என இன்னும் பலவற்றை கொண்டு அருங்காட்சியமாக உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் திரைக்குப் பின்னால் உள்ள ரகசியங்களை அங்கே வீடியோக்கள் மூலம் காணலாம்.

இன்று உங்கள் ராசிக்கு என்ன???

2011 Guru Peyarchi Palangal

ஆயுதங்கள் இறக்குமதியில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா


China's Share of Global Arms Imports Falls, Sipri Says - World News Headlines in Tamilஉலகில் மிக அதிக அளவில் ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில், பாகிஸ்தானும், சீனாவும் உள்ளன.சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இயங்கிவரும், "ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் ஏற்க முடியாதது: பான் கீ மூன்


மார்ச், 2012. புதன்கிழமை
Syria situation 'unacceptable and intolerable': Ban Ki-moon - World News Headlines in Tamilசிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடைபெற்று வரும் கிளர்ச்சியில் சுமார் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஓராண்டாக நடந்து வரும் இந்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனை தடுக்க ஐ.நா.சபையும், அரபு நாடுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை சிரியா தனது ஆதரவு நாடுகளான ரஷ்யா, சீனா ஆகியவற்றின் துணையுடன் முறியடித்து வருகிறது.

அமெரிக்க போர் விமான குண்டு வீச்சுக்கு பாக். பாராளுமன்ற குழு எதிர்ப்பு


Pakistan panel demands US apology on air attack - World News Headlines in Tamilஅமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் பாராளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது. எனவே அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்படுமா? என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோரப்பகுதிகளில் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.

தாயை விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிளமண்ட் ஜோசப்ராஜ், தொழில் அதிபர். இவருடைய மனைவி ரோஸ்மேரி (வயது 56). இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவர்களில் 3-வது மகன் வினோஜ் பெல்ட்டன் (32). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு.
வினோஜ் பெல்ட்டனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் சினிமாபட தயாரிப்பு பணியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் இவர்களுக்கு சொந்தமான சொகுசு காரின் ஆர்.சி. புக்கை வினோஜ் பெல்ட்டன் தந்தையிடம் கேட்டார். அப்போது, ஆர்.சி. புக்கை கொடுக்க தாய் ரோஸ்மேரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வினோஜ் பெல்ட்டன் அரிவாளுடன் தாயை வெட்ட முயன்றார். உடனே, ரோஸ்மேரி வீட்டின் கதவை திறந்து உயிருக்கு பயந்து ஓடினார். பின்னால் வெறி பிடித்தவன் போல் வினோஜ் பெல்ட்டன் துரத்தினார்.
சாலையில் சிறிது தூரம் ஓடியதும் ரோஸ்மேரி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் அரிவாளுடன் துரத்தி வந்த வினோஜ் பெல்ட்டன், தனது தாயை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரோஸ்மேரி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அப்போது, அருகில் நின்றவர்கள் வினோஜ் பெல்ட்டனை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள் அவர் சொகுசு காரில் ஏறி தப்பி சென்றார்.
இது குறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வினோஜ் பெல்ட்டன் தப்பி சென்ற கார் குறித்த விவரங்களை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவித்தனர். பின்னர் ஆரல்வாய்மொழி பகுதியில் காரில் சென்ற போது, வினோஜ் பெல்ட்டனை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆக்‌ஷனைத் துறந்த அர்ஜுன்

மாஸ் ஹீரோக்கள் தங்களது 50-வது அல்லது 100-வது படம் என்றால்
அதைத் தங்கள் சரித்திர சாதனையாக நினைப்பார்கள். அந்தப் படத்தை   ரசிகர்களுகு மிகப்பெரிய விருந்தாகவும், அதே சமயம் நல்ல மாஸ் படமாக கொடுக்க வேண்டும் என்று திட்டமிடுவது வழக்கம். இந்த நிலையிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
நடிகை வேதிகா - அழகான புது போட்டோ சூட் படங்கள்

விஜயலக்ஷ்மி - வனயுத்தம் - பிரஸ் மீட்டில் படங்கள்

தமிழ்த்திரையுலகின் கனவு தேவதை பட்டம் பெற்றார் ஹன்சிகா மோத்வானி படங்கள்

காஜால் அகர்வால் - படங்கள் புதுசு

பொதுவாக ஆக்ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அர்ஜுன், தனது 150-வது படத்தை வித்தியாசமான படமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். காது கேளாத, வாய் போசாத ஒரு சிறுவனை மையமாக வைத்து உருவாகும் 'பிரசாத்' என்ற தரமான கதைப் படமாக அதை தேர்வு செய்திருகிறார்.
இப்படத்தின் தலைப்பும் படத்தில் இடம்பெறும் சிறுவனுடைய கதாபாத்திர பெயர்தான். இப்படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் சங்கப்புக்கு உண்மையாகவே காது கேட்காதாம். இப்படத்தின் மூலம் அனைவரையும் கண்டிப்பாக கண் கலங்க வைப்பான் சங்கப். அந்த அளவுக்கு கதையோட்டமும், சிறுவனுடைய கதாபாத்திர அமைப்பும் இருக்கும் என்கிறார் அர்ஜுன்.

கதைப்படி சாதாரண மெக்கானிக்காக இருக்கும் அர்ஜுன், தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அவன் வளர்ந்து தனது கஷ்ட்டங்களைப் போக்குவான் என்ற கனவுகளோடு இருக்க, அப்படியே ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த குழந்தை வாய் பேசாத, காது கேளாத குழந்தையாக பிறக்கிறது. அதன்பிறகு அந்தக்குழந்தையை அர்ஜுனும், அவரது மனைவியும் எப்படிப் பார்த்தார்கள். சங்கப்புக்கு வீட்டிலும் வெளியிலும் என்ன நடக்கிறது என்பதை மிகவும் செண்டிமென்ட்டாக சொல்லியிருக்கிறார்களாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில்  ஒரேநேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், மற்ற அர்ஜுன் படங்களில் இருக்க கூடிய சண்டைகாட்சிகளையும், டூயட் பாடல்களையும் தவிர்த்திருக்கிறார்கள். இதுவரை அர்ஜுன் நடிக்காத கதாபாத்திரமாக உருவாகும் இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பதுதான் கூடுதல் சிறப்பு.

ஏற்கனவே இந்தப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு  பாராட்டுக்களை அள்ளி வந்திருகிறது. தமிழ்ரசிகர்களின் இதயத்தை இந்தப் படம் கரைக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்!

சச்சின் 100வது சதத்தை தொட்ட வரலாற்று சாதனை தருணம் இது தான் - வீடியோ

கிரிக்கெட் வரலாற்றில் 100 வது சதம் என்ற உச்ச சாதனையை வங்கதேசத்துடனான
இன்றைய போட்டியில் நிகழ்த்தினார் சச்சின் டென்டுல்கர்.

அதன் வீடியோ இணைப்பு
 
 

சச்சின் 100 வது சதம் சாதனைக்கு பின்னால் சில தகவல்கள்


இலங்கை விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை : 22 நாடுகள் ஆதரவு?

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில்,
நேற்று முன் தினம் புதன்கிழமை இலங்கையின் விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவை மாநாட்டில் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவினால் நேற்று முன் தினம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் வரைபு 47 அங்கத்துவ நாடுகளுக்கும் சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இப்பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பிரேரணையை ஆதரிப்பதற்கு இதுவரை 22 நாடுகள் அமெரிக்காவிடம் கூட்டாக இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற உப மாநாடொன்றில், அமெரிக்காவின் பிரேரணைகள் குறித்த அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களை அமெரிக்கா கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது பிரித்தானியா, அயர்லாந்து, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, சுவீடன், டென்மார்க், நோர்வே, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து, போர்த்துக்கல் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் பிரேரணைக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன. பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கியுப்பா, எகிப்து, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, இந்தோனேசியா, சிம்பாப்வே ஆகிய நாடுகள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.

இந்தியா எந்தவித கருத்தினையும் தெரிவிக்காது மௌனத்தை கடைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணம் இன்றி வாழலாம்!..வாழ்கின்றார்கள்..!

வாழ்க்கைக்குப் பணம் தேவையா ? தேவை, பணமும் தேவை என்பது போன்றே பதில்களையே
கண்டு வந்திருக்கின்றோம். பணப் புழக்கம் அற்ற வாழ்வு ஒரு ஆதி காலத்து  வாழ்வு முறை என்ற கருத்தே வலுத்திருக்கிறது. ஆனால் இன்றைய நாகரீக உலகில் பணப் புழக்கத்தைத் தவிர்த்து வாழும் ஒரு மக்கள் சமூகம் பற்றிப் பேசுகிறது கலையகத்தின் இக் கட்டுரைப்பதிவு.
நாகரீக வரலாற்றின் முக்கியத்துவம் பெற்ற கிரேக்கத்தில், இன்றைய சம காலத்தில் வாழும் மக்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் பின் வாழத் தொடங்குவது பற்றி விவரிக்கும் இக் கட்டுரை,  அவ்வாறான ஒரு வாழ்க்கை முறையின் சாத்தியங்கள் எதுவரை பொருந்தும்  என்பதையும் சுட்டி நிற்பது சிறப்பும், அப்பால் புதிய சிந்தனைக்குத் தூண்டுவதுமாகும். கட்டுரையாளர் கலையரசனுக்கு உரிய நன்றிகளுடன் அக்கட்டுரைப் பதவினை தீபனின் வாசகர்களுக்கா இங்கு மீள்பதிவு செய்கின்றோம். - 

கிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்

பணப்புழக்கம் இல்லாத, எந்த சந்தர்ப்பத்திலும் பணத் தாள்களை பயன்படுத்தாத, சமுதாயம் ஒன்றை காட்ட முடியுமா? கிரேக்கத்தில் அப்படியான சமூகம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. கிரேக்க மக்கள், தீமையின் அவதாரமான பணத்தை, தமது வாழ்க்கையில் வெறுத்து ஒதுக்கி வருகின்றனர். கிரேக்க நாடு, யூரோ நாணயத்தை பயன்பாட்டில் கொண்டுள்ளது. கடந்த சில வருடங்களாக, நிதி நெருக்கடி காரணமாக, மக்களிடம் யூரோவின் கையிருப்பு குறைந்து கொண்டே செல்கின்றது. கையில் காசில்லாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், தற்பொழுது ஒரு மாற்றுப் பொருளாதார சமூகத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த சமூகத்தை, கிராமிய, அல்லது நகர மட்டத்தில், நீங்களும் உருவாக்கிக் கொள்ளலாம். குறிப்பாக ஏழைகள் நிறைந்த, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், மாற்றுப் பொருளாதாரத்தின் அவசியம் காணப்படுகின்றது. அதற்கு முதல், கிரேக்க மக்கள், பணமின்றி எப்படி வாழ்கின்றார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்.
கிரேக்க நாட்டுப்புறங்களில், மாற்று நாணய வலையமைப்பு (Alternative Currency Network ) என்றொரு கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் உறுப்பினராக சேரும் ஒருவர், தனக்குத் தெரிந்த பண்டத்தை உற்பத்தி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவர் வீட்டில் சவர்க்காரம் செய்யும் கைத்தொழிலை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் உற்பத்தி செய்த சவர்க்காரத்திற்கு விலை நிர்ணயம் செய்கின்றார். ஒரு சவர்க்காரத்தின் விலை 1 கரெட்டி (kaereti). வலையமைப்பை சேர்ந்த நபர்கள், வந்து வாங்கிச் செல்வார்கள். அதற்குப் பதிலாக, அவர் எத்தனை கரெட்டிக்கு சவர்க்காரம் விற்கின்ராரோ, அந்த அளவுக்கு, விரும்பிய பொருட்களை பண்டமாற்றாக பெற்றுக் கொள்ளலாம். அது தேன், பழம், காய்கறி, இறைச்சி, எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவர் எவ்வளவு கரெட்டிக்கு விற்றார், எவ்வளவு கரெட்டிக்கு பொருட்களை வாங்கினார், என்பன போன்ற விபரங்கள் கணனியில் குறித்து வைக்கப் படும். அமைப்பில் உள்ள உறுப்பினர்களின், அத்தனை கணக்கு வழக்குகளும், மத்திய கணணி ஒன்றில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. இந்தப் பணப் பரிமாற்றத்தில், யூரோ நாணயங்கள் பாவனையில் இல்லாததால், யாரும் ஊழல் செய்து பணம் சேர்க்க முடியாது.
இந்த சமூக வலையமைப்பில் உள்ள உறுப்பினர்களே, தமக்கு எந்தப் பொருள் தேவை என்பதையும், விலையையும் தீர்மானிக்கின்றனர். ஓரிடத்தில் பண்டமாற்று நடைபெற்றால், அதிலே சம்பந்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும், பொருளின் விலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, நாணயப் பரிமாற்றத்தில் நிச்சயிக்கப் பட்ட தொகையை, ஒருவர் மற்றவரது கணக்கில் குறித்துக் கொள்வார்கள். "சமூக நாணயம்" என்றழைக்கப் படும் கரெட்டி மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். யூரோ, டாலர் அல்லது வேறு நாணயத்தை பயன்படுத்துவது தடைசெய்யப் பட்டுள்ளது. கரெட்டி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? "நான் ஒருவருக்கு, பிரதிபலன் எதிர்பாராமல், சிறு உதவி செய்கிறேன்." என்று அர்த்தம்.
கிரேக்கத்தில் இன்று பல்கிப் பெருகி வரும், மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். விவசாய விளை பொருட்கள், மீன், வைன், மரத் தளபாடங்கள், சவர்க்காரம், ஒலிவ் எண்ணை, கைவினைப் பொருட்கள், சாக்லேட், ஆடை வகைகள், செருப்பு, நகைகள்... இன்னும் பல. உங்களுக்கு என்னென்ன பொருட்கள் அத்தியாவசியமாக தேவைப் படுகின்றதோ, அத்தனையும் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை வாங்குவதற்கு, நீங்கள் ஒரு யூரோ நாணயம் கூட கையில் வைத்திருக்கத் தேவையில்லை. அதிலே பெரிய சிக்கல் ஒன்றுமில்லை. ஒரு சாதாரண வர்த்தக நிலையத்தில் நடப்பதைப் போல, ஒவ்வொரு பண்டமும் வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், பரிமாற்றம் துரித கதியில் நடக்கின்றது. அதற்கு காரணம், டிஜிட்டல் மயப் படுத்தப் பட்ட நாணயப் பரிமாற்றம். கணனியில் பாவிக்கப்படும் மென்பொருள், எல்லாவற்றையும் ஒரு நொடியில் முடித்துத் தந்து விடுகின்றது.
உங்களுக்குத் தேவையான உணவை அல்லது உடையை வாங்குவதற்கு, நீங்களும் ஏதாவது ஒரு பண்டத்தை வைத்திருக்க வேண்டுமா? இல்லை. எல்லோருமே உற்பத்தியாளராக இருக்க முடியாது. ஏதாவது ஒரு துறையில், தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் நிறையப் பேர் உள்ளனர். வைத்தியர், கணக்காளர், ஆசிரியர், வழக்குரைஞர், பொறியியலாளர், கணணி வல்லுநர், மெக்கானிக், தையல்காரர், முடி திருத்துபவர், சமையல்காரர், தோட்டக்காரர்.... இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இப்படி ஏராளமான தொழில் தேர்ச்சி பெற்ற நபர்கள், தமது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றனர். உங்களுக்கு வேறென்ன வேண்டும்? சுருக்கமாக, இது ஒரு தன்னிறைவு கண்ட சமுதாயம்.
கரெட்டி எனும் உள்ளூர் நாணயம், ஆகஸ்ட் 2011 முதல் புழக்கத்தில் வந்துள்ளது. கிரேட்டா என்ற தீவில் மட்டும், 300 க்கும் அதிகமானோர் அந்த நாணயத்தை பயன்படுத்துகின்றனர். கிரேக்கப் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருவதால், தினசரி புதிய உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நாளொன்றுக்கு ஒரு பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக, அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார். கணக்கு வழக்குகள் அனைவருக்கும் தெரியும் படியாக இருப்பதால், ஊழலுக்கு அங்கே இடமில்லை. ஒவ்வொரு உறுப்பினரும், தினசரி நடக்கும் பணமாற்றத்தை பார்வையிடலாம். விலை, விற்ற அல்லது வாங்கிய பொருட்களின் எண்ணிக்கை, எல்லாவற்றையும் சரி பார்க்கலாம். ஒரு காரெட்டி நாணயத்தின் மதிப்பு ஒரு யூரோ. ஆனால், யூரோ நாணயம் பயன்படுத்துவது இந்த வலையமைப்பில் தடை செய்யப் பட்டுள்ளது.
மாற்று நாணயத்தை ஆதரிக்கும், கிரேட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசியல்- பொருளாதார விரிவுரையாளர் George Stathakis கூறுகின்றார். "சமூகத்தின் அடித்தட்டு ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மாற்றுப் பொருளாதாரம் அமைக்கப் பட்டுள்ளது. மந்த நிலையில் இருந்த பொருளாதார செயற்பாடுகள் ஊக்குவிக்கப் படுகின்றன. இதனால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. நம்பிக்கை, எளிமை, வெளிப்படையான தன்மை, இவை தான் (கரெட்டி) நாணய பரிமாற்றத்தின் அடிப்படை. இன்று கிரேக்கம் முழுவதும் 26 வலையமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த வருட இறுதிக்குள், நாடு முழுவதும் நூறு அமைப்புகள் இயங்கத் தொடங்கியிருக்கும்."
உதாரணத்திற்கு, அவர் வாழ்க்கையில் நடந்த பரிமாற்றம் ஒன்றைப் பற்றிக் கூறினார். "ஓய்வு நேரத்தில், எனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒலிவ் மரத்தில் இருந்து, ஒலிவ் எண்ணை தயாரிக்கிறேன். அதனை ஒரு வியாபாரிக்கு விற்றால், போத்தல் ஒன்று 1 .80 யூரோவிற்கு விற்க வேண்டும். ஆனால், கடையில் அதன் விலை 5 யூரோக்கள்! மாற்று நாணய வலையமைப்பு உறுப்பினர் ஒருவர், ஒலிவ் எண்ணைக்கு பதிலாக, வாகனக் காப்புறுதி செய்து தர ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு, ஒரு போத்தல் ஒலிவ் எண்ணை 2 .5 கரெட்டிக்கு (1 கரெட்டி = 1 யூரோ) விற்க ஏற்பாடாகியுள்ளது. எமது பரிமாற்றத்தில் இடைத்தரகர் யாரும் நுழையாததால், இருவருக்கும் இலாபம்."
பொருளாதார நெருக்கடியால், முதியோர் தான் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர். மின்சாரம், எரிவாயுக் கட்டணங்களை கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர். இன்று, மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் அவற்றைக் கட்ட உதவுகின்றனர். முதியோரை பராமரிக்கின்றனர். வேலைக்கு போகும் தம்பதியினரின், குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆள் கிடைக்கின்றது. வீட்டில் ஏதாவது உடைந்து விட்டால், யாராவது வந்து திருத்திக் கொடுக்கிறார்கள். எங்கேயாவது போக வேண்டுமானால், தெருவில் கண்டாலும், வாகனம் வைத்திருப்பவர்கள் ஏற்றிச் செல்கிறார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போலப் பழகுகின்றனர். அவர்களுக்கு இடையே உண்மையான நட்பு மலர்ந்துள்ளது. தங்களுடைய வாழ்க்கையில், "முதல் தடவையாக சுதந்திரத்தை அனுபவிப்பதாக," அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
மாற்று நாணய வலையமைப்பானது உள்ளூர் மட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. தேசத்தின் பொருளாதார பிரச்சினையை தீர்க்கும் வல்லமை அதற்குக் கிடையாது. வங்கிகளும், அரச கட்டமைப்புகளும், நிதி நிறுவனங்களும் மட்டுமே பாரிய மாற்றங்களை உண்டாக்கலாம். ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே, பெரிய அதிசயங்களை நிகழ்த்திக் காட்டலாம். அது வரையில், மாற்று நாணய பொருளாதாரம், யூரோ நாணய பொருளாதாரத்திற்கு சமாந்தரமாகவே சென்று கொண்டிருக்கும். வெகுஜன ஊடகங்கள், உலக மக்களுக்கு பிரயோசனமான, இது போன்ற செய்திகளை தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்கின்றன. "வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் வன்முறையாளர்களாகவே", அவர்கள் கிரேக்க மக்களைக் காட்டி வருகின்றனர். கிரேக்க மக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யவும் தெரியும், அதே நேரம், புதியதோர் உலகத்தை படைக்கவும் தெரியும்.
பணப் புழக்கம் இல்லாத சமுதாயங்கள் பல, வரலாற்றில் ஏற்கனவே இருந்துள்ளன. சோவியத் யூனியனிலும், மாவோவின் சீனாவிலும், சில இடங்களில் பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றுமேயில்லாத வெறும் கட்டாந்தரையில் இருந்து, நவீன நகரங்கள் உருவாகின. இந்த கம்யூனிச சமுதாயங்கள், இன்றைக்கும் இயங்கிக் உள்ளன. அவை எதுவும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப் படவில்லை. (பணம் இருந்தால் தானே பிரச்சினை?) தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு மகிழும் மேதைகள், நவீன இஸ்ரேல் எவ்வாறு உருவானது என்ற இரகசியத்தை கூற மாட்டார்கள். (அவர்களுக்கே தெரியுமா என்பது கேள்விக்குறி) முதன்முதலாக, ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான் பாலஸ்தீனத்தில் சென்று குடியேறினார்கள். அவர்கள் அங்கே கம்யூனிச சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தினார்கள். பொதுவுடைமை உற்பத்தி முறை பின்பற்றிய விவசாயக் கிராமங்கள் சில, தொழிற்துறை வளர்ச்சி கண்டன.

கூடங்குளம் போராட்ட களத்தில் குவியும் மக்கள் :

கூடங்குளத்தில் 3ம் நாளாகாவும் உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினருடன் அப்பகுதி மக்கள்
பத்தாயிரம் பேர் இனைந்திருப்பதாகத் தெரிய வருகிறது. கூடங்குளத்திற்குச் செல்லும் பாதைகள் மறிக்கபட்டிருப்பதால், கடல் மார்க்கமாக அங்கு மக்கள் குவிந்து வருவதாகத் தெரியவருகிறது.
இதேவேளை அங்கு குடும்பங்களுடன் போராட்டத்தில் இனைந்திருக்கும் சிறுவர்களுக்கான உணவுப் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தண்ணீர் விநியோகம், மின்சார விநியோகம் தடுக்கப்பட்டிருப்பதனால், குடிதண்ணீர் பிரச்சனை அதிகரித்திருப்பதாகவும், அதேபோல் கழிப்பிட வசதியும் போதாத நிலையில் உள்ளதாகவும், இதனால் சூகாதரப் பற்றாக் குறை காரணமாக நோய் தொற்றுக்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், மருத்துவமனைகள் உள்ள போதும், போதிய மருந்துகள் இல்லாதிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு மோசமான நிலை உருவாகி வருவதாகவும், அதனால் அப்பகுதியில் நிறைந்திருக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என அச்சம் தோன்றியுள்ளதாகவும் அறிய வருகிறது.
இதேவேளை அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் என்ன நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை தோன்றியுள்ளதாகவும், போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தமிழக அரசு காவல்துறை நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம் எனவும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இது இவ்வாறிருக்க, உதயகுமார் மற்றும் அவரது மனைவி மீரா இனைந்து நாகர்கோவிலை அடுத்த பழவிளை பகுதியில் சாக்கர் என்ற பெயரில் நடத்தி வரும் மெட்ரிகுலேசன் பள்ளியின் சுவர்களை இடிக்கப்பட்டும், பொருட்கள் சூறையாடப்பட்டும் உள்ளதாகத் தெரியவருகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னரும் இப் பாசாலை மீது சிறு அளவில் தாக்குதல்கள் இடம் பெற்றிருந்த நிலையில், இன்று காலையில் பள்ளிக்கு சென்ற ஊழியர்கள், பள்ளியின் முன்பக்க சுவர் முற்றிலும் இடிக்கப்பட்டும், பள்ளியினுள் இருந்த நூலகம், எல்.கே.ஜி. வகுப்பறைகள் ஆகியவையும் சூறையாடப்பட்டு இருந்தையும் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், இது தொடர்பில் உதயகுமாரின் மனைவி மீரா, ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்தத் தெரிவித்த மீரா; இப்பகுதி மாணவ மாணவிகளின் நலனுக்காக நாங்கள் இப்பள்ளியினை நடத்தி வருகிறோம். தற்போது இந்த பள்ளிமீது மர்மநபர்களால் விஷமத்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன், ஒரு அநாமதேயக் கடிதம் வந்ததாகவும், அதில் இங்கிருக்கும் பள்ளியை மூடி விட்டு ஜெர்மனிக்கு சென்று பள்ளி நடத்தும்படியும், அடுத்த கல்வி ஆண்டில் இப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேர மாட்டார்கள் எனவும், மீறி வகுப்புகளை நடத்தினால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் மிரட்டப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எனது கணவர் உதயகுமார், கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதும், அவர் யாரையும் புண்படுத்தியது இல்லை. வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால் அரசும், போலீசாரும் எங்களுக்கு பாதுகாப்பு தராததால் எங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இது தொடர்பில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கூடங்குளம் போராட்டத்தில் ஆர்வம் காட்டிய பல்வேறு தமிழக அரசியற் கட்சிகளும் தற்போது மிக இறுக்கமான இந்தந் சூழ்நிலையில், அமைதி காத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்தி தொடர்பில் நீங்கள் நினைப்பது என்ன?

நாகரீகமான வார்த்தைகளில் உங்கள் கருத்துக்களைத் கீழேயுள்ள பாக்ஸில் தெரிவியுங்கள். அவற்றிக்கு கருத்தாளர்களே உரித்துடையவர்கள். அனுமதித்த பின்னரே வெளியாகும்.கருத்துக்கள் தெரிவிப்பதற்கான முறை மற்றும் தமிழில் எழுத, உதவிக்கு அழுத்துக!..

Loading