"தீபன் பக்கங்கள்"

அமெரிக்காவில் புயல் ; 27 பேர் பலி!!.


அமெரிக்காவில் புயல் ; 27 பேர் பலி!! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் இன்டியானா, கென்டகி மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் இன்று வீசிய கடும் புயல்  மற்றும் டோர்னடோ எனும் சுழற்காற்றின் காரணமாக குறைந்தபட்சம் 27 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்டியானா மாநிலத்தின் 3 கவுன்ரிகளுக்கு பரவிய புயலின் காரணமாக 13 பேர் பலியானதாகவும்  கென்டகி மாநிலத்தில் 12 பேரும் ஒஹையோவில் இருவரும்  பலியானதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இயற்கையின் அகோரத்திற்கு நாம் ஈடுகொடுக்கக் கூடியவர்கள் அல்லர் என இன்டியானா மாநிலத்தின் ஆளுநர் மிச் டேனியல் தெரிவித்துள்ளார்.  அவர் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

அமெரிக்காவில் புயல் ; 27 பேர் பலி!! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் புயல் ; 27 பேர் பலி!! (படங்கள் 
இணைப்பு)

அமெரிக்காவில் புயல் ; 27 பேர் பலி!! (படங்கள் 
இணைப்பு)

அமெரிக்காவில் புயல் ; 27 பேர் பலி!! (படங்கள் 
இணைப்பு)

அமெரிக்காவில் புயல் ; 27 பேர் பலி!! (படங்கள் 
இணைப்பு)

திருமணமான 1 மணி நேரத்தில் விவாகரத்து!!


திருமணமான 1 மணி நேரத்தில் விவாகரத்து!!

புதிதாக திருமணம் செய்த மனைவி கார் கேட்ட காரணத்தினால், திருமணமான 1 மணி நேரத்திலேயே கணவர் விவாகரத்து செய்த சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது.

லீ(வயது 23)வுக்கு 27 வயதான வாங் என்பவருடன் திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.அப்போது அங்கு கார் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் வந்தார். லீ தனது கணவர் வாங்கிடம் புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு கேட்டார்.

அதற்கு வாங் மறுப்பு தெரிவிக்கவே, இவர்களின் சண்டை முற்றியது. கார் வாங்கித் தராவிட்டால், விவாகரத்து செய்து விடுவதாக லீ மிரட்டினாள்.

பின் அவர்கள் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான மனுவை பூர்த்தி செய்து தந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டுபாய் பிரஜைகளைக் கொன்றது நுளம்பு மருந்து??


டுபாய் பிரஜைகளைக் கொன்றது நுளம்பு மருந்து??

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரஜைகளான ஓர் இளம் தாயும் குழந்தையும் உணவு நஞ்சானதன் காரணமாக இறந்ததாக முதலில் நம்பப்பட்டதாகவும் தற்போது இந்த மரணங்கள் ஹோட்டல் அறையில் பயன்படுத்திய நுளம்பு மருந்து ஆவியினால் உண்டான ஒவ்வாமை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

டுபாயிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இலங்கை வந்த பின் இவர்கள் உணவு எதையும் சாப்பிடவில்லை என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவர்கள் சீதுவையிலுள்ள ரமடா ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

வத்தளை நீதவான் கட்டளைக்கு அமைய மரணமான இருவரினதும் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்கள் இரண்டு சடலங்களையும் டுபாய்க்கு கொண்டு செல்ல அனுமதி கோரியுள்ளனர்.

பூரண விசாரணை மேற்கொள்ள மரண விசாரணை அதிகாரியினால் நடத்தப்பட்ட விசாரணை மட்டுமே போதாது என பொலிஸ் கூறியுள்ளது. முதலில் உணவு நஞ்சானதால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இரசாயன ஆவி தான் இந்த மரணங்களுக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இறந்த பெண்ணின் கணவன் முகமட் அலி ஒபய்ட் அல் மஸ்றெளவி தற்போது சுகமடைந்துள்ளார்.

ஆனால் பொலிஸார் இன்னும் இவரிடம் வாக்குமூலம் பெறவில்லை. இவரின் மனைவியான 21 வயதுள்ள ஒபரா அலியும் ஒன்டரை வயதுள்ள மகனும் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்தனர்.

இலங்கையிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் விசாரணைகளை அவதானித்து வருகின்றது. இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை என்னால் நிரூபிக்க முடியும்: நாசா விஞ்ஞானி!!


வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை என்னால் நிரூபிக்க முடியும்: நாசா விஞ்ஞானி!!


இப்பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் உயிரினங்கள் வாழ்கிறது. அதே போல் நாம் வாழும் இந்தப் பூமியிலும் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றும் அதை தன்னால் நிரூபிக்க முடியும் என்று நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன் ஆய்வு கட்டுரையில், அண்டார்டிக்கா, சைபீரியா, அலாஸ்கா போன்ற பகுதிகளில் நிலத்தில் வாழும் உயிரினங்களின் அடிப்படை குணாம்சத்தை ஒத்துள்ள, சாதாரண கண்களுக்குத் தெரியாத பாக்டீரியாக்களின் படிமங்களை தன் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்துள்ளதாகவும், இதைத் தன்னால் அறிவியல ்பூர்வமாக நிரூபிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

சாக்லேட் பிரியர்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி!

தினசரி சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது. 
அதாவது அதிக அளவில் சாக்லேட் திண்பவர்களுக்கு குடல் புற்று நோயின் தாக்குதல் குறையும் என ஸ்பெயின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சாக்லேட்டுகளில் கோகோ கலக்கப்படுகிறது. அதில், ஆன்டி ஆக்சிடென்டஸ் என்றழைக்கப்படும் உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது.
இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறு களை அழிக்கக்கூடிய தன்மை படைத்தவை. எனவே, சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்றுநோய் தாக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் குடல் புற்றுநோய்க்கு ஆண்டு தோறும் 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவுடைய பூனை!!

ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.
அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.
ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.
வீட்டிற்கு வந்தால்
பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.
அடுத்தநாள்
அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான்.
அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன்
அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டான்.
சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.
கணவன் கேட்டான்,
''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?
''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,
''போனை பூனையிடம் கொடு.
எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''
**தீபன்**

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி அமெரிக்காவில் நடப்பதை அறிந்து, புரச்சித்தளபதி, தமிழர்குல தங்கம்(பயபுள்ள இப்படிச் சொன்னாத்தேன்,றோம்ப சந்தோசப்படுறான்) ஓடிப்புடித்து கலந்துகொண்டதன் நிகழ்ச்சித்தொகுப்பே இந்த பதிவு….

சூர்யா : வாங்க வணக்கம்..உங்க பேரு…

கோவாலு : தன்னிகரில்லா தலைவன்..மாசு கலக்காத தங்கம்…

சூரியா : ஸ்டாப்….எங்கிட்ட வைச்சுக்காத..ஒழுங்கா பேரச் சொல்லு..

கோவாலு : ஹி..ஹி..கோவாலு சார்..

சூர்யா : ங்கொய்யால..கோவாலுன்னு மொக்கை பேர வைச்சிக்கிட்டு பண்ணுறஅலும்ப பாரு…

கோவாலு : சார், ஒரு டவுட்டு

சூர்யா : கேளுங்க…

கோவாலு : எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்..அப்படிங்குற கஷ்டமானகேள்வியெல்லாம் கேட்பிங்களா சார்..

சூர்யா : அது ஒரு கோடிக்கான கேள்வி..அதெல்லாம் கடைசியிலதான்..அதுவரைக்கும் மிகவும் எளிமையாத்தான் இருக்கும்

கோவாலு : தேங்க்யூ சார்

சூர்யா : சரி கோவாலு..உங்களைப் பத்தி சொல்லுங்க..என்ன பண்ணுறீங்க..

கோவாலு : அய்யோ சார்..இப்படியெல்லாம் கேட்பீங்கன்னு நினைச்சுக்கூடபார்க்கலை சார்..நீங்க நடிச்ச அவன் இவன் படம் ஒன்பது தடவைபார்த்திருக்கேன் சார்..அதுவும், பெண் வேஷத்துல நீங்க கலக்கியிருப்பீங்க..

சூரியா(டென்சனாகி) : (ஒருவேளை காதும், மூளையும் அட் எ டயத்துல டமாராமாகியிருக்குமோ)..பரவாயில்லை கோவாலு..உங்கள் பொது அறிவுஎன்னை வியக்கவைக்கிறது..உங்களைப் பத்தி சொல்லுங்க..

கோவாலு : ஊருப்பக்கத்துல கஷ்டப்படுற பேமியில இருந்து வந்தவன் சார் நானு..காலையில தண்ணி கிடைக்கலைன்னு, சாராயத்துலதான் கு…

சூர்யா : யோவ்..கொல்லப்போறேன் பாரு

கோவாலு : குளிப்போமுன்னு சொல்லவந்தேன் சார்

சூர்யா : அவ்வளவு எளிமையா

கோவாலு : ஆமா சார்..காலங்காத்தால, 10 பூரி, ரெண்டு பொங்கல், 4மெதுவடை..

சூர்யா : டோட்டல் பேமிலிக்கா

கோவாலு : இல்ல சார்..எனக்கு மட்டும்தான்..சும்மா ஸ்நாக்ஸ்சுக்கு..

சூர்யா : அடீங்க..நீங்க இப்படி ஒல்லியா இருக்குறதுக்கு காரணம் புரியுது…நிக்ழ்ச்சிக்கு போகலாமா…

கோவாலு : எங்க சார் போவுறது..சானல்காரங்க உக்கார்ந்துதான் நிகழ்ச்சின்னுசொன்னாங்க..

சூர்யா : யோவ் லொல்லு கோவாலு..விட்டேன்…ஒழுங்கா பர்ஸ்ட் கேள்வியகேட்டுக்க…உங்களுக்கான முதல் கேள்வி..

தமிழகத்தின் பொற்கால ஆட்சியில் கரண்டு கட்டு ஆவது, எவ்வளவு நிமிடம்…

5 நிமிடம் B) 10 நிமிடம் C) 1 நிமிடம் D) கரண்டு கட்டு ஆவதே இல்லை

யோசித்து பதில் சொல்லுங்கள்..யுவர் டைம் ஸ்டார்ட் நௌ…

கோவாலு : சார்..அமெரிக்காவுல இருக்குற எனக்கு இப்படி ஒரு கஷ்டமானாகேள்வியா இருந்தா எப்படி சார்..அதுவுமில்ல சானல்காரயங்க இந்தகொஸ்டின கேப்பீங்கன்னு சொல்லவே இல்லையே..

சூரியா : நீங்க வேணுன்ன லைப் லைன யூஸ் பண்ணுங்களேன்

கோவாலு : ஓகே சார்..மதுரையில இருக்குற என் உயிர் நண்பன் ராசாவுக்குபோன் பண்ணுறேன்

(தொலைபேசுகிறார்)

கோவாலு : ராசா..நாந்தான் கோவாலு பேசுறேன்..

ராசா : டே கோவாலு..என்னடா காலங்காத்தால..டே..உனக்குதெரியுமா..டாஸ்மார்க்க 11 மணிவரைக்கும் ஓபன் பண்ணிவைச்சிருக்காய்ங்க..செம குஜாலு..நீ மிஸ் பண்ணிட்டட்டா..

கோவாலு : ராசா..எங்கூட சூரியா இருக்காருடா..ஒரு கேள்வி கேக்குறேன்பதிலு சொல்லு..

ராசா : கண்டிப்பாடா..அதுக்கு முன்னாடி ரொம்ப இருட்டா இருக்கு..லைட்டபோடுறேன்..அய்யய்யோ..கரண்ட காணோமேடா….அய்யய்யோ..டே..மூக்குகண்ணாடி வேற கீழே விழுந்துருச்சே..இந்த இருட்டுல கண்ணுதெரியலையே..அய்யய்யோ..ஒன்னும் தெரியலையே..

சூர்யா : டைம் அப்…கோவாலு..உங்களுக்கான டைம் முடிந்தது..யோசித்துபதில் சொல்லுங்கள்

கோவாலு : என்ன சார்..இப்படி கேட்டுப்புட்டிங்க..(மிகவும்யோசிக்கிறார்..யோசித்து கடைசியாக,,) சரி சார்..ஆப்சன் D) கரண்டு கட்டுஆவதே இல்லை…

சூரியா : ஜீனியஸ்..லாக் பண்ணுங்க..வாவ் சரியான விடை..எப்படி கரெக்டாகண்டுபுடிச்சீங்க….

கோவாலு : ங்கொய்ய்யால தமிழ்நாட்டுல கரண்டுன்னு ஒன்னு இருந்தாதானேகட் ஆகும்..அதுதான் கண்ணுல பார்த்து ரொம்ப நாளாச்சுன்னுசொல்லுறாய்ங்களே..

சூர்யா : (பயத்துடன்..ஆஹா..வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிச்சுர்வான்போலிருக்கே) சரியான விடை..உங்களுக்கான ரெண்டாவது கேள்வி இதோ..

இந்தியாவின் பிரதமர் யார்
மன்மோகன் சிங்க் B) அன்னா ஹசாரே C) சோனியா காந்தி 4) இளைய தளபதி விஜய்

கோவாலு : யூ நோ..அய் ஆம் எ என்.ஆர்.ஐ..ஐ டோண்ட் நோ இண்டியா..ப்ளடி கண்ட்ரி…ஆல் பொல்யூசன்..கரெப்ஷன்…

சூர்யா : கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுடா வெண்ட்ரு..

கோவாலு : சார்..லைப் லைனு யூஸ் பண்ணிக்கலாம…

சூர்யா : ஸ்யூர்..எந்த லைப் லைனு..

கோவாலு : 50 – 50.. ஆனா சார்..

சூர்யா : ஆனா..

கோவாலு : இந்த லைப் லைன 75-25 ஆ மாத்த முடியுமா..3 தவ்றான பதில தூக்கிட்டா நல்லா இருக்க..

சூரியா : பேசாம ஒன்னு பண்ணுவோம்..நீ இந்த சீட்டுக்கு வந்துரு..நீயே கேள்வி கேட்டுட்டு நீயே பதில் சொல்லிக்க..அப்படியே ஒரு கோடிய எடுத்துட்டு போயிரு..வெங்கம்பயலே…

கோவாலு : கோவிச்சுக்காதிங்க சார் : 50-50 யே யூஸ் பண்ணுங்க..

சூர்யா: ஓகே கோவாலு: இதோ உங்களுக்கான ஆப்சன்…

மன்மோகன் சிங்க் B) இளைய தளபதி விஜய்…

கோவாலு : ம்….A) மன்மோகன்சிங்க்

சூர்யா : வாவ்..கரெக்டான ஆன்சர்..பொது அறிவுல நீங்க எங்கயோ போயிட்டிங்க…எப்படி இதெல்லாம்..நிறைய புத்தகம் படிப்பீங்களா..

கோவாலு : ரொம்ப புக்ழாதிங்க சார்..கூச்சாம இருக்கு..சிம்பிள் மேட்டர் சார்..இளைய தளபதி விஜய் தமிழக முதல்வர்..அப்படி இருக்குறப்ப அவர் எப்படி பிரதமர் ஆக முடியும்..ஆக இருக்குறது..மன்மோகன்சிங்க்..அவராத்தான இருக்க முடியும்,.ஆமா ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்..யார் சார் மன்மோகன்சிங்க்..ஹர்பஜன்சிங்க் அண்ணனா….

சூர்யா : (டென்சனாகி) ங்கொய்யால..யோவ் விஜய் டிவி..அந்த கேமிராவை ஆப் பண்ணுய்யா..இன்னைக்கு செட்டுல ஒரு கொலை நடக்கப்போகுது..ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னு வெயிட்டுடா..என்று அங்கிருக்கும் கம்ப்யூட்டரை பிடிங்கி அடிக்கப் பாய

கோவாலு…தலைதெறிக்க ஓட..விளம்பர இடைவேளை இப்படித் தொடங்குகிறது..

(உலகத்துலேயே, லைவ்வாக ஒரு கொலை..உங்களுக்காக வழங்குவது….கொக்க கோலா..பெப்சி..மிரிண்டா..பேரண்லவ்லீ…ஸ்வீட் எடு கொண்டாடு..)
**தீபன்**

Facebook

https://www.facebook.com/

Loading