"தீபன் பக்கங்கள்"

மாலி நாட்டில் திடீர் ராணுவ புரட்சி



Military coup in Mali, soldiers loot presidency - World News Headlines in Tamil
ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி நாட்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ஆட்சியை கைப்பற்றி விட்டதாக ராணுவத்தினர் அறிவித்தனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜிரியா அருகே மாலி நாடு அமைந்துள்ளது. இது தங்கம் மற்றும் பருத்தி வளம் கொண்ட நாடாகும். இதன் ஜனாதிபதியாக அமாடோவ் துமானி தோரி பதவி வகித்து வருகிறார். இந்த நாட்டில் வடக்கு பகுதியில் துக்ரீக் என்ற கிளர்ச்சி இயக்கத்தினர் ராணுவத்திற்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இவர்களை ஒடுக்க ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களை வழங்க அரசாங்கம் தவறி விட்டதாக ராணுவத்தினர் ஆதங்கப்பட்டனர். இதனை அடுத்து கேப்டன் அமாடோவ் சானோகோ தலைமையில் 'ஜனநாயகத்தை மீட்கும் தேசிய கமிட்டி' என்ற புதிய அமைப்பு ஒன்றை ராணுவத்தினர் ஏற்படுத்தினார்கள். அரசுக்கு ஒரு வாரம் கொடு கொடுத்தனர். ஆனாலும் ராணுவத்தினருக்கு ஆயுதம் வழங்கப்படவில்லை.
எனவே, இந்த அமைப்பை சேர்ந்த ராணுவ வீரர்கள் திடீரென்று தலைநகர் பாமகோவில் புரட்சியில் ஈடுபட்டனர். வீதிகளில் துப்பாக்கியால் சுட்டபடி ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்று தாக்குதல் நடத்தினர். அங்கு இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால் பொதுமக்கள் சிதறி ஓடி வீடுகளில் பதுங்கினார்கள்.
தலைநகரில் உள்ள தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிலையங்களை ராணுவத்தினர் கைப்பற்றினர். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட்டதாக தொலைக்காட்சியின் மூலம் அறிவித்தனர்.
இது பற்றி புரட்சி நடத்திய ராணுவ அமைப்பின் செய்தி தொடர்பாளர் கோனாரே வெளியிட்ட அறிக்கையில், 'நாட்டை அச்சுறுத்தும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தவறி விட்டதால் புரட்சி நடத்தப்பட்டது. அரசியல் சட்டம் கலைக்கப்பட்டு விட்டது. விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும்' என்று தெரிவித்தார்.
அத்துடன் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நேற்று அரசு அலுவலங்கள் திறக்கப்படாமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. தலைநகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டதால் விமானங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.
ஜனாதிபதி துமானி தோரி எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை ராணுவத்தினர் வெளியிடவில்லை. புரட்சி வெடித்ததும், ஜனாதிபதி தனது மாளிகையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
ராணுவ புரட்சி ஏற்பட்டதை அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். அதே நேரத்தில் ஜனாதிபதி பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பதவி இழந்த ஜனாதிபதி 1991-ல் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியவர். பின்னர் 2002-ல் தேர்தல் நடத்தி 2 முறை ஆட்சிக்கு வந்தவர். அடுத்த மாதம் தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில் அவர் ஆட்சியில் இருந்து ராணுவத்தால் விரட்டப்பட்டு உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையின் போது 100 வீரர்களை பிடித்து சென்று விட்டனர். இவர்களது கதி என்ன? என்று இன்னும் தெரியவில்லை. ராணுவத்திற்கு பெரிய இழப்புகள் ஏற்பட்டதுடன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் 2 லட்சம் மக்கள் அகதிகளாக வெறியேறினர்.
இதனால் ராணுவத்தினர் கொதிப்படைந்தனர். இவர்களை சமாதானப்படுத்த புதிதாக நியமிக்கப்பட்ட ராணுவ மந்திரி சடியே கசாமா என்பவர் காதி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்றார். அவரை பார்த்ததும் ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எங்களுக்கு நவீன ஆயுதம் தாருங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை சமாதானம் செய்ய முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதனை அடுத்து திடீர் புரட்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தொடரும் 12 நாடுகளுக்கு அமெரிக்கா நோட்டீஸ்,,



US puts India, China and other hold-outs on notice on Iranian sanctions - World News Headlines in Tamil
ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறி தொடர்ந்தும் கச்சா எண்ணெய்யை அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வரும் இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு அமெரிக்கா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைவிதித்தது. அமெரிக்காவின் இத்தடையை ஏற்று ஜப்பான், பெல்ஜியம் உள்ளிட்ட பலநாடுகள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டன.
இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாதது பற்றி இந்தியா, சீனா உட்பட 12 நாடுகளிடம் அமெரிக்கா விளக்கம் கோரியுள்ளது.
ஈரான் மீதான பொருளாதாரத் தடையை முழுமையாக அமல்படுத்தும்போதுதான் அணு ஆயுத தயாரிப்பு குறித்து ஈரான் ஒன்றுக்கு இரண்டுமுறை சிந்திக்கும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு
இவ்விவகாரம் தொடர்பாக தனித்தனியாக எந்த ஒருநாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அனைத்து நாடுகளும் இத்தடையை நடைமுறைப்படுத்த ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் தெரிவித்துள்ளார்.

17 அப்பாவிகளை கொன்ற விவகாரம்: பழிதீர்க்கப்போவதாக தலீபான்கள் மீண்டும் மிரட்டல்!!



Afghan Taliban: no faith in trial of US massacre suspect - World News Headlines in Tamil
ஆப்கானிஸ்தானில் கண்டகார் பகுதியில் அமெரிக்க ராணுவ வீரரான ராபர்ட் பாலிஸ்(38) கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 அப்பாவிகள் இறந்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பாலிஸ், அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு ராணுவ முகாமில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறார். அவர் மீது 17 கொலை வழக்குகள் தொடரப்படும் என அமெரிக்க அதிகாரிகள் நேற்று அறிவித்தனர்.
இந்தநிலையில் அமெரிக்கா நடத்தும் இந்த விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தலீபான் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் சபிதுல்லா முஜாகித் கூறுகையில், 'அமெரிக்கா திட்டமிட்டு செயல்படும் இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. சம்பந்தப்பட்ட கொடூர செயலுக்கு பழிதீர்ப்போம். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவது உறுதி' என்று தெரிவித்தார்.

அமெரிக்க பாடகி விட்னி ஹூஸ்டனின் சாவுக்கு காரணம் என்ன? பிரேத பரிசோதனை நிபுணர் விளக்கம்



Whitney Houston died of drowning, cocaine use: Coroner - World News Headlines in Tamil
அமெரிக்க பிரபல பாப் இசை பாடகி விட்னி ஹூஸ்டன் மாரடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை நிபுணர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது சாவு குறித்த சந்தேகத்துக்கு தீர்வு கிடைத்து விட்டது.
அமெரிக்காவை சேர்ந்த விட்னி ஹூஸ்டன் (வயது 48) பிரபல பாப் இசை பாடகியாக விளங்கினார். இசை உலகில் கொடிக்கட்டி பறந்த அவர் கிராமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றவர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் குளியல் அறை தொட்டியில் நிர்வாண நிலையில் கிடந்ததாக கூறப்பட்டது. இவர் ஏற்கனவே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அவருடைய மரணம் இயற்கையானதா? அல்லது வேறு காரணம் இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால் பிவெர்லி ஹில் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தினர்.
இவரது சாவுக்கு காரணம் என்ன? என்ற சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிவந்து இருக்கிறது. பிரேத பரிசோதனை நடத்திய நிபுணர்களில் ஒருவரான எட் வின்டெர் இதுபற்றி கூறியிருப்பதாவது:-
பாடகி விட்னி ஹூஸ்டனின் சாவு எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சம்பவம் ஆகும். மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மயக்கம் அடைந்து அவர் குளியல் தொட்டி தண்ணீரில் விழுந்ததால் மரணம் அடைந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடகி விட்னி பல்வேறு வகையான போதை தரும் மருந்துகளை உபயோகித்து இருப்பதற்கான தடயங்கள் இந்த பிரேத பரிசோதனையில் தெரிய வந்தன. ஆனால் அவை மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கேடு விளைவிக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எந்த அளவிற்கு அவை உடலில் இடம் பெற்றிருந்தது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
பாடகி விட்னியின் சாவு விஷயத்தில் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் நிபுணர் எட் வின்டெர் கூறி விட்டார். எனவே மர்ம சாவு குறித்த வழக்கை பிவெர்லி ஹில் போலீசார் கைவிடுவார்கள் என தெரிகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்த பிறகு 2 வாரத்தில் இதுபற்றி முடிவு செய்வோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் ராணுவ புரட்சி என வதந்தியை கிளப்பிய இணையதள செய்தி முடக்கம்



Censors block online rumors about coup as China battles infighting within ruling party - World News Headlines in Tamil
சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக நிறையபேர் இணையதளம் மூலம் வதந்தியை பரப்பி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் சீன இணையதளத்தில் ராணுவ புரட்சி செய்தியை வெளியிட்டதுடன், தலைநகர் பீஜிங் நகர தெருக்களில் ராணுவ டாங்கிகளும், கவச வாகனங்களும் உலவுவது போன்ற படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சீன அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள், அந்த இணையதள செய்தியை முடக்கி வைத்தனர். ராணுவ டாங்கி படங்கள், ராணுவ ஒத்திகையில் எடுக்கப்பட்ட பழைய படங்கள் ஆகும்.
சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. அதையடுத்து, துணை அதிபர் ஜி ஜின்பிங், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிபர் பதவியை பிடிக்க, ஆளும் கட்சியான சீன கம்யூனிஸ்டு கட்சியில் பெரும் அதிகாரப் போட்டியே நடந்து வருகிறது.
இந்த போட்டியில், கட்சியின் முக்கிய பதவியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போ ஜிலாய் என்பவரின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்விதம் ஆளும் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில், ராணுவ புரட்சி வதந்தி அனைவரையும் நம்ப வைத்துள்ளது.

வன்னியரசு கைதுக்கு வைகோ கண்டனம்



Vaiko Condemns Vanni Arasu arrest - Tamilnadu News Headlines in Tamil
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் அறவழியில் காந்திய வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இடிந்தகரையில் உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். பாளையில் நேற்று மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற போராட்டம் வன்முறைக்கு துளியும் இடமின்றி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்ட பின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து நள்ளிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு நேற்று நள்ளிரவு ராஜபாளையம் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதும் பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதமாக இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று வந்த விமலன் மீது அப்பட்டமான பொய் வழக்கு போட்டு கைது செய்து தமிழக காவல்துறை சிறையில் அடைத்துள்ளது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தினரை கொச்சைப்படுத்தியும், களங்கம் கற்பித்தும், கிறிஸ்தவ மிஷனரிகள் மீது பழி சுமத்தியும் மத்திய மந்திரிகள் நச்சுப்பிரசாரம் செய்து வந்தனர். போராட்டகாரர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், மக்களின் அச்சம் நீங்கும் வரையில் அணுஉலை தொடங்க தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கூறிவந்த முதல் - அமைச்சர் அதிரடியாக அணு உலைக்கு ஆதரவு தந்ததோடு போராட்டகாரர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

அணு உலைக்கு எதிராக நடைபெற்று வருகின்ற அறவழி போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கும், பொதுமக்கள் மத்தியில் இப்போராட்டம் குறித்து மிக தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகவும் தமிழக காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய அராஜகபோக்கு எதேச்சதிகார நடவடிக்கையின் விளைவாகும். இந்த கைது நடவடிக்கைகளுக்கு பலத்த கண்டனத்தை தெரிவிப்பதோடு கைதானவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வார ராசிபலன் : Week Rasipalan


மார்ச் - 2012 - March
ஞாயிறு
25
Sunday, March 25, 2012
நல்ல நேரம்
காலை 7.00 TO 9.00
எமகண்டம்
12.00 TO 1.30
இராகு காலம்
4.30 TO 6.00
இன்றைய ராசிபலன்
மேஷம்:போட்டிரிஷபம்:பக்தி
மிதுனம்:நன்மைகடகம்:ஆதரவு
சிம்மம்:நிம்மதிகன்னி:வரவு
துலாம்:சோதனைவிருச்சிகம்:சாந்தம்
தனுசு:சிரமம்மகரம்:ஓய்வு
கும்பம்:முயற்சிமீனம்:கவலை

Loading