"தீபன் பக்கங்கள்"

ஓய்வு பெறும் சிந்தனை இன்னும் ஏற்படவில்லை - சச்சின்


அண்மையில் சரவதேச ஒரு நாள் போட்டிகளில் நூறாவது சதத்தை அடித்து சாதனை படைத்த சச்சின்

டென்டுல்கர் ஒபன் என்ற சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அணி வீரர்களுடன் சேர்ந்து நின்று தேசிய கீதம் பாடும் போது இப்பவும் கூட எனக்கு மயிர்கூச்செறிகிறது.
அதே உணர்வுதான் மட்டையை எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கும்போதும் இருக்கிறது எனவும் என்னை விமர்சிப்பவர்கள் எனக்கு கிரிக்கெட் சொல்லித் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதில் 100வது சதம் எடுத்தமை தொடர்பில் அவர் குறிப்பிடும் போது

" 100 வது சதம் எடுப்பது ஏன் கடினமாக இருந்தது என்பது எனக்கே புரியவில்லை. ஒருவேளை அது தேசிய வெறியாக மாறி என்னையும் மனதளவில் பாதித்தமை காரணமாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார் சச்சின் டென்டுல்கர்.

ஓய்வு பெறுவதைப் பற்றி இன்னமும் சிந்திக்கவில்லை என சச்சின் டென்டுல்கர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

Loading