"தீபன் பக்கங்கள்"

இலங்கையில் வலுவாக கால்ஊன்ற முயற்சிகிறதா சீனா?

மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றதால் இலங்கை கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்ததால் இந்தியா மீது சிங்கள தலைவர்கள் அதிருப்தியுடன் உள்ளனர். இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்ததால் எதிர் காலத்தில் இந்தியா-இலங்கை இடையிலான உறவு பாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தியாவுடனான உறவில் மாற்றம் இல்லை என்று சிங்கள மந்திரி லட்சுமன்யாபா அபேவர்தன கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுடன் எமக்குள்ள நட்பு நீடிக்கும். அதை ஒருபோதும் முறித்துக் கொள்ள மாட்டோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு கெடும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றார். இலங்கை வடகிழக்கு பகுதியில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. அந்த பணிகள் நீடிக்குமா? என்று கேட்டதற்கு லட்சுமன்யாபா கூறுகையில், இந்தியாவின் அபிவிருத்தி பணிகள் இடையில் நிறுத்தப்பட மாட்டாது. அமெரிக்காவுடனும் நாங்கள் முரண்பாடான நிலையை எடுக்க மாட்டோம் என்றார். இதற்கிடையே சிங்கள பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசிய பிரதமர் ஜெயரத்னே, ஐ.நா.சபையில் தங்களை ஆதரித்த 15 நாடுகளுக்கும் நன்றியை தெரிவித்தார். ஐ.நா.சபையில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து மகிந்த ராஜபக்சேயின் தம்பியும் மந்திரியுமான பசில்ராஜ பக்சே கூறுகையில், சர்வதேச அளவில் இலங்கை மீது அடிக்கடி இப்படி நெருக்கடி வருகிறது. அதை அரசு வெற்றிகரமாக எதிர்நோக்கியுள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில், வலுவான நாடுகள் கொடுக்கும் நெருக்கடிகளால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்த நெருக்கடிகளை எங்களால் முறியடிக்க முடியும் என்றார். ஐ.நா.சபையில் வந்த தீர்மானம் விஷயத்தில் இலங்கையை விட சீனாதான் தீவிரமாக இருந்தது. தீர்மானத்தை தோற்கடிக்க சீனா மட்டுமே வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்தது. இலங்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்து விடும் திட்டத்துடன் சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் தீர்மானம் வெற்றி பெற்றதும் சீனா அதிர்ச்சி அடைந்தது. என்றாலும் இந்தியாவின் நிலைப்பாட்டை சொல்லி, இலங்கையில் சீனா வலுவாக கால்ஊன்ற முயற்சிகள் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

Loading