நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில்,
நேற்று முன் தினம் புதன்கிழமை இலங்கையின் விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவை மாநாட்டில் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவினால் நேற்று முன் தினம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் வரைபு 47 அங்கத்துவ நாடுகளுக்கும் சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இப்பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பிரேரணையை ஆதரிப்பதற்கு இதுவரை 22 நாடுகள் அமெரிக்காவிடம் கூட்டாக இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற உப மாநாடொன்றில், அமெரிக்காவின் பிரேரணைகள் குறித்த அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களை அமெரிக்கா கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது பிரித்தானியா, அயர்லாந்து, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, சுவீடன், டென்மார்க், நோர்வே, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து, போர்த்துக்கல் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் பிரேரணைக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன. பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கியுப்பா, எகிப்து, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, இந்தோனேசியா, சிம்பாப்வே ஆகிய நாடுகள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.
இந்தியா எந்தவித கருத்தினையும் தெரிவிக்காது மௌனத்தை கடைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
கருத்துரையிடுக