ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோரப்பகுதிகளில் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேட்டோ விமான குண்டு வீச்சில் பாகிஸ்தானை சேர்ந்த 24 வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவுடன் கைகோர்த்து உறவாடும் பாகிஸ்தானுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் அமெரிக்க படைக்கு எரிபொருட்களை எடுத்து செல்லவும், விமான தளத்தை பயன்படுத்தவும் தடை விதித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேட்டோ விமான குண்டு வீச்சில் பாகிஸ்தானை சேர்ந்த 24 வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவுடன் கைகோர்த்து உறவாடும் பாகிஸ்தானுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் அமெரிக்க படைக்கு எரிபொருட்களை எடுத்து செல்லவும், விமான தளத்தை பயன்படுத்தவும் தடை விதித்தது.
மேலும் அபோதாபாத்தில் அல் கொய்தா தலைவர் பின்லேடனை கொன்றது, லாகூரில் 2 பாகிஸ்தானியரை சுட்டுக் கொலை செய்தது ஆகியவற்றால் அமெரிக்கா மீது பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகளும் அமெரிக்காவுடனான உறவை பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தின. பின்லேடன் கொலை மற்றும் நேட்டோ தாக்குதலால் மக்கள் கோபத்துடன் இருக்கிறார்கள் என்று கூறின. எதிர்ப்பு வலுப்பதை உணர்ந்த அமெரிக்கா தனது சிறப்பு தூதரை அனுப்பி சமாதானம் செய்தது.
இந்நிலையில் ராசா ரப்பானி தலைமையிலான பாகிஸ்தான் பாராளுமன்ற கமிட்டி நேற்று தனது பரிந்துரைகளை சமர்பித்தது. அதில் பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்ற முக்கிய அம்சம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் நேட்டோ தாக்குதல் தொடர்பாக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க பாகிஸ்தான் வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இந்த பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இதனால் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான நல்லுறவில் பாதிப்பு ஏற்படுமா? என்ற நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் பிரபல செய்தி நிறுவனம் இது பற்றி குறிப்பிடுகையில், "பாராளுமன்ற கமிட்டியின் பரிந்துரைகள் இறுதியான முடிவு அல்ல. இது அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்ட சிபாரிசு தான்" என்று கூறியுள்ளது. மேலும் ரப்பானி கூறுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள படைகளுக்கு பொருட்களை எடுத்து செல்ல அனுமதித்தால் அதற்கு வரி வசூலிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருப்பதாகவும் தகவல் கூறுகிறது. எனவே பாகிஸ்தான் அரசாங்கமே இந்த பிரச்சினையில் இறுதி முடிவை எடுக்க வேண்டும். அதை பொறுத்து தான் உறவு பாதிக்குமா? என்பது தெரியவரும்.

0 comments:
கருத்துரையிடுக