மாஸ் ஹீரோக்கள் தங்களது 50-வது அல்லது 100-வது படம் என்றால்
அதைத் தங்கள் சரித்திர சாதனையாக நினைப்பார்கள். அந்தப் படத்தை ரசிகர்களுகு மிகப்பெரிய விருந்தாகவும், அதே சமயம் நல்ல மாஸ் படமாக கொடுக்க வேண்டும் என்று திட்டமிடுவது வழக்கம். இந்த நிலையிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
நடிகை வேதிகா - அழகான புது போட்டோ சூட் படங்கள்
விஜயலக்ஷ்மி - வனயுத்தம் - பிரஸ் மீட்டில் படங்கள்
தமிழ்த்திரையுலகின் கனவு தேவதை பட்டம் பெற்றார் ஹன்சிகா மோத்வானி படங்கள்
காஜால் அகர்வால் - படங்கள் புதுசு
பொதுவாக ஆக்ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அர்ஜுன், தனது 150-வது படத்தை வித்தியாசமான படமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். காது கேளாத, வாய் போசாத ஒரு சிறுவனை மையமாக வைத்து உருவாகும் 'பிரசாத்' என்ற தரமான கதைப் படமாக அதை தேர்வு செய்திருகிறார்.

இப்படத்தின் தலைப்பும் படத்தில் இடம்பெறும் சிறுவனுடைய கதாபாத்திர பெயர்தான். இப்படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் சங்கப்புக்கு உண்மையாகவே காது கேட்காதாம். இப்படத்தின் மூலம் அனைவரையும் கண்டிப்பாக கண் கலங்க வைப்பான் சங்கப். அந்த அளவுக்கு கதையோட்டமும், சிறுவனுடைய கதாபாத்திர அமைப்பும் இருக்கும் என்கிறார் அர்ஜுன்.
கதைப்படி சாதாரண மெக்கானிக்காக இருக்கும் அர்ஜுன், தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அவன் வளர்ந்து தனது கஷ்ட்டங்களைப் போக்குவான் என்ற கனவுகளோடு இருக்க, அப்படியே ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த குழந்தை வாய் பேசாத, காது கேளாத குழந்தையாக பிறக்கிறது. அதன்பிறகு அந்தக்குழந்தையை அர்ஜுனும், அவரது மனைவியும் எப்படிப் பார்த்தார்கள். சங்கப்புக்கு வீட்டிலும் வெளியிலும் என்ன நடக்கிறது என்பதை மிகவும் செண்டிமென்ட்டாக சொல்லியிருக்கிறார்களாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரேநேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், மற்ற அர்ஜுன் படங்களில் இருக்க கூடிய சண்டைகாட்சிகளையும், டூயட் பாடல்களையும் தவிர்த்திருக்கிறார்கள். இதுவரை அர்ஜுன் நடிக்காத கதாபாத்திரமாக உருவாகும் இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பதுதான் கூடுதல் சிறப்பு.
ஏற்கனவே இந்தப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாராட்டுக்களை அள்ளி வந்திருகிறது. தமிழ்ரசிகர்களின் இதயத்தை இந்தப் படம் கரைக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்!

0 comments:
கருத்துரையிடுக