"தீபன் பக்கங்கள்"

சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் ஏற்க முடியாதது: பான் கீ மூன்


மார்ச், 2012. புதன்கிழமை
Syria situation 'unacceptable and intolerable': Ban Ki-moon - World News Headlines in Tamilசிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடைபெற்று வரும் கிளர்ச்சியில் சுமார் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஓராண்டாக நடந்து வரும் இந்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனை தடுக்க ஐ.நா.சபையும், அரபு நாடுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை சிரியா தனது ஆதரவு நாடுகளான ரஷ்யா, சீனா ஆகியவற்றின் துணையுடன் முறியடித்து வருகிறது.
தற்போது ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்குள்ள ஜகர்த்தா நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் ஏற்க முடியாதது. எனவே பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்ற அனைத்து நாடுகளும் இணைந்து ஒரே நிலைப்பாட்டுடன் குரல் கொடுக்க வேண்டும். அங்கு வன்முறையை தடுக்க சுமூக பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. முக்கியத்துவம் கொடுக்கும்" என்று குறிப்பிட்டார்.

0 comments:

கருத்துரையிடுக

Loading