துருக்கி நாட்டின் தென்கிழக்கே ஈராக்கையொட்டிய பகுதியில் குர்திஷ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க அங்குள்ள ரிட்லிஸ், கூடி, சிரித் ஆகிய இடங்களில் ராணுவத்தினரும், போலீசாரும் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இங்கு பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே 2 நாட்களாக கடும் சண்டை நடந்தது. ராணுவத்தினரை எதிர்த்து பெண் தீவிரவாதிகளும் சண்டையில் ஈடுபட்டனர்.
இந்த சண்டையில் 15 பெண் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தார்கள். மேலும் 6 போலீஸ் அதிகாரிகளும் உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு 1984-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இத்தகைய தாக்குதல்களில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு இதை தீவிரவாதிகள் முறித்துக் கொண்டு மீண்டும் தாக்குதலில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

0 comments:
கருத்துரையிடுக