"தீபன் பக்கங்கள்"

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிர்ச்சியில் பெண் பலி



Strong quake shakes Chile - World News Headlines in Tamil
சிலி நாட்டின் மத்திய பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் துறையினர் அறிவித்தனர்.
அங்குள்ள டால்கா நகருக்கு 27 கிலோ மீட்டர் தென்மேற்கு 35 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த அதிர்வினால் பெரிய அளவில் பொருட்கள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
என்றாலும் தலைநகர் சான்டியாகோ மற்றும் நாட்டின் மத்திய பகுகளில் இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் இருந்த டி.வி. பெட்டிகள், சமையல் அறை பாத்திரங்கள் போன்றவை கடகடவென ஆடின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தினால் கடலோரப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுனாமி ஆபத்து இல்லை என தெரிய வந்த பின்னர் இவர்கள் வீடு திரும்பினர். தென்மத்திய பகுதியில் இருக்கும் பார்ரால் நகரில் வசித்த 74 வயது பெண் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதை அந்த நகர மேயர் தெரிவித்தார்.
இந்த சிலி நாட்டின் மத்திய பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

Loading